தமிழக காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது! – பாஜக அண்ணாமலை கண்டனம்!
தமிழக காவல்துறை ஒரு கட்சி சார்ந்த ஏவல் துறையாக செயல்படுவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில்
திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் எதிர்கட்சி பிரமுகர்கள் மீது கைது நடவடிக்கைகள் திட்டமிட்டு நடத்தப்படுவதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் பாஜக பிரமுகர்கள் சிலர் கைது செய்யப்பட்டது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர் “சைக்கிளில் செல்லவும் செல்பி எடுப்பதற்குமா டிஜிபி; நேர்மையான டிஜிபியாக இருந்தால் பிபின் ராவத் உயிரிழப்பு குறித்து தவறான கருத்து கூறியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தமிழக காவல்துறை மோசமாக செயல்படுகிறது. காவல்துறை ஒரு கட்சியை சார்ந்த
ஏவல் துறையாக உள்ளது” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment