காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோஷ்டி மோதல்… ஏராளமான போலீஸார் குவிப்பு!
காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட கடும் கோஷ்டி மோதலால் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்குடியில் காங்கிரஸ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு மற்றும் தற்போதை தலைவர் அழகிரி ஆகியோரது ஆதரவாளர்களிடையே மன்னார்குடியில் ஏற்பட்ட கைகலப்பு மற்றும் மோதலை அடுத்து ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் தங்கபாலுவின் ஆதரவாளர்களால் நடத்தப் பட்டு வரும் காந்தியன் அறக்கட்டளை சார்பில் 75 வது சுதந்திர தினவிழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது அங்கு வந்த தற்போதைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் அழகிரி ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியின் சின்னமான கை சின்னம் பயன்படுத்துவதை கண்டித்து கூட்டத்தில் கடும் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது முன்னாள் தலைவர் தங்கபாலு ஆதரவாளர்கள் நாங்கள்தான் உண்மையான காங்கிரஸ்காரர்கள் எனவும், நீங்கள் இதை கேட்க தகுதியில்லை என அழகிரி ஆதரவாளர்களை தாக்க முயன்றனர்.
அப்போது இரு தரப்பினரிடையே கைகலப்பு ஏற்பட்டு சட்டையைபிடித்து இழுத்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படாமல் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து கே.வி.தங்கபாலு ஆதராவாளர்கள் கூறியதாவது:
“ காந்தியன் இயக்கம் காங்கிர கட்சியின் சார்பு இயக்கம். தற்போது உள்ள மாவட்ட தலைவர், ஏகாதிபத்திய தலைவர் போல் ஆணவமாக நடந்து கொள்கிறார். மாவட்ட தலைவரை மாற்ற இந்த கூட்டம் நடைபெறுகிறது.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மன்னை மதியழகன் கூறியதாவது:
“ இந்த இயக்கம் காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கியது அல்ல, அகில இந்திய அளவில் எலாபரேட்டட் இயக்கம் இது, காந்தியன் இயக்கத்தை காங்கிரஸ் கட்சி கட்டுபடுத்தமுடியாது”, இவ்வாறு தெரிவித்தார்
இருப்பினும் தங்கபாலுவின் ஆதரவாளர்கள் கூட்டம் நடத்திய பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவிவருவதால், ஏராளமான போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment