Gold: இன்னைக்கே நகை வாங்குனா நல்லது... ரேட் ரொம்ப கம்மி!
Gold: இன்னைக்கே நகை வாங்குனா நல்லது... ரேட் ரொம்ப கம்மி!
சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஏதோ ஒரு நாள் விலை குறைந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் விலை உயர்த்தப்படுகிறது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
சென்னையில் இன்று (டிசம்பர் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,549 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,553 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 32 ரூபாய் குறைந்து 36,392 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தூய தங்கத்தின் விலை!
தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,919 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,915 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 39,352 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 32 ரூபாய் குறைந்து 39,320 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!
ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,731 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,536 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,536 ஆகவும், கேரளாவில் ரூ.4,538 ஆகவும், டெல்லியில் ரூ.4,750 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,748 ஆகவும், ஒசூரில் ரூ.4,557 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,559 ஆகவும் இருக்கிறது.
வெள்ளியின் விலை!
வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.66.20 ஆக இருந்தது. இன்று அது 66 ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment