கலைஞர் உணவகம்: அமைச்சர் கொடுத்த உறுதி!
500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி டெல்லியில் பேசியுள்ளார்.
இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, “அனைத்து மக்களுக்கும் ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளை செயல்படுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. முத்தமிழறிஞர் கலைஞரால் தமிழக மக்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கும் பொருட்டு சிறப்பு பொது விநியோகத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 407 உணவகங்களும், 14 மாநகராட்சிகளில் 105 உணவகங்களும் நகராட்சிகளில் 138 கிராம பஞ்சாயத்துகளில் 4 அம்மா உணவகங்களும் செயல்படுகின்றன. இதன் மூலமாக சராசரியாக நாளொன்றுக்கு 400 நபர்களுக்கு முழு உணவு குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இதற்கு முந்தைய கூட்டத்தின்போது குறிப்பிட்டவாறு, கலைஞர் உணவகம் என்ற பெயரில் மேலும் 500 உணவகங்களை திறப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையையொட்டி 2 கோடியே 15 லட்சம் கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து 161 கோடி மதிப்பீட்டில் 20 வகை உணவுப்பொருட்கள் வழங்க இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சமுகப் பாகுபாடின்றி சுமார் 40 ஆண்டுகளாக பொது விநியோகத்திட்டம் செயல்படுத்தி வருவதாவும், மதிய உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு முட்டை வழங்கப்பட்டுவதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment