அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மாநில அரசின் புத்தாண்டு பரிசு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 22, 2021

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மாநில அரசின் புத்தாண்டு பரிசு!

 அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மாநில அரசின் புத்தாண்டு பரிசு!


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது
ஆந்திர மாநிலத்தில், முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநில அரசு புத்தாண்டு தினத்தை மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 5.24 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. இது, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி 33.536 சதவீதத்தில் இருந்து 38.776 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த அகவிலைப்படி வரும் ஜனவரி மாதம் முதல் மூன்று தவணைகளில் வழங்கப்படும்.

ஜில்லா பரிஷத், மண்டல் பரிஷத், கிராம பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி, முனிசிபல் கார்ப்பரேஷன், விவசாய மார்க்கெட் கமிட்டி (ஏஎம்சி), ஜில்லா கிராந்தாலயா சமஸ்தா, உதவி பெறும் பாலிடெக்னிக் உள்ளிட்ட உதவி பெறும் நிறுவனங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், வழக்கமான ஊதிய விகிதத்தில் உள்ள ஆந்திர வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் டாக்டர் ஒய்எஸ்ஆர் தோட்டக்கலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் பணிபுரிவோர் இதன் மூலம் பயன் அடைவார்கள்.

அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை உயர்த்தியதற்கு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆந்திர பிரதேச அரசு ஊழியர் சம்மேளனத் தலைவர் கே.வெங்கடராமி ரெட்டி நன்றி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad