ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் கிடையாது: பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!
llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
தடுப்பூசி போட்டுக் கொண்டதன் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என பிரபல ஐடி நிறுவனமான இன்டெல் அறிவித்துள்ளது
கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், உலக நாடுகள் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன. இதனிடையே, ஒமைக்ரான் பரவலால் தடுப்பூசி செலுத்தி கொள்வதன் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டு வருவதுடன், பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க அரசாங்கத்தின் ஆணைப்படி கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பதில் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தி கொள்வதும் ஒரு பகுதியாகும். 100 அல்லது அதற்கும் அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனங்களில், அனைத்து ஊழியர்களுமே முழுவதுமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு இருக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேசமயம், அடுத்த ஆண்டு முதல் ஊழியர்களை மீண்டும் அலுவலகப் பணிக்கு திரும்ப செய்வதற்கான முயற்சிகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவர்கள் அனைவரும் தவிர்க்க முடியாத காரணங்களை தவிர்த்து கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியதற்கான விவரங்களை ஊழியர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட மருத்துவம் மற்றும் பிற காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத ஊழியர்கள், 2022ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதிக்குள் அதைப் பற்றி விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பிக்க தவறினால், ஏப்ரல் மாதம் முதல் சம்பளம் வழங்காமல் விடுப்பு அமல்படுத்தப்படும் என்று இன்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அல்லது சில காரணங்களுக்காக தடுப்பூசி போட முடியாத ஊழியர்கள் அனுப்பும் விவரங்களை மார்ச் மாதத்திற்குள் மதிப்பாய்வு செய்யப்படும். அவை ஏற்கத்தகுந்ததாக இருந்தால் அக்காரணங்கள் அனுமதிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் எனவும் இன்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஒன்றரை லட்சம் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தகவலை கூகுள் நிறுவனம் பதிவேற்றம் செய்துள்ளது. அத்துடன், “ஜனவரி 13ஆம் தேதிக்குள் முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட விவரங்கள் அல்லது செலுத்திக் கொள்ள முடியாது காரணங்களை சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் விவரங்களை அனுப்பத் தவறினால், ஊழியர்களுக்கு 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும்.
தொடர்ந்து, 30 நாட்களுக்குள் அவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டது அல்லது எடுத்துக் கொள்ள முடியவில்லை என்பது பற்றி விவரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் ஆறு மாதம் சம்பளம் இல்லாத விடுப்பு அளிக்கப்படும். அதற்குப் பிறகும் முறையான காரணங்களுடன் தகவல்களை சமர்ப்பிக்கவில்லை என்றால் அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்.” என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்தது.
கூகுள் நிறுவனத்தை பின்பற்றி தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்டெல் நிறுவனமும் மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகது.
No comments:
Post a Comment