அமெரிக்கா கலவரம் முதல் ஒமைக்ரான் வரை! - 2021ல் நடந்தது என்ன?
சர்வதேச அளவில் 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை காண்போம்.2021 ஆம் ஆண்டு முடியும் தருவாயில் உள்ளோம். இந்த ஆண்டு முழுவதுமே உலகம் முழுவதும் பல்வேறு திருப்பங்களும், அதிரடி மாற்றங்களும் அரங்கேறின. அதில், முக்கியமானவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்க முடியாத டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள், தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், கடந்த ஜனவரி 6 ஆம் தேதி, கடும் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு ட்ரம்பின் ஆதரவு எம்.பி.,க்களே கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக இது போன்ற கலவரம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த வன்முறையில் 8 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சியின் டொனால்டு ட்ரம்பை வீழ்த்திய ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், கடந்த பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி, அமெரிக்காவின் 46வது அதிபராக பதவி ஏற்றார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவி ஏற்றார்.
மியான்மரில் ராணுவ ஆட்சி
அண்டை நாடான மியான்மரில், கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், அந்நாட்டு ஆங் சான் சூகியை கைது செய்தது. பிறகு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சூயஸ் கால்வாய்
அண்டை நாடான மியான்மரில், கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம், அந்நாட்டு ஆங் சான் சூகியை கைது செய்தது. பிறகு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடன் அமைச்சர்கள் உள்ளிட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தன. இதையடுத்து, பிரதமர் நேதன்யாஹூ பதவி விலகினார். 12 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்திற்கு பிறகு அவர் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
சீனா சொந்தமாக அமைத்து வரும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு கடந்த ஜூன் மாதம் 17 ஆம் தேதி 3 வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஷென்ஜோ -12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களையும் தாங்கி விண்ணிற்கு செலுத்தப்பட்டது. விண்வெளி மையத்திற்கு செல்லும் மூவரும் 3 மாதங்கள் சீன விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்தனர்.
விண்வெளிக்கு சென்ற ஜெப் பெசோஸ்
உலகின் ‘நம்பர் 1’ பணக்காரர் ஜெப் பெசோஸ் தனது குழுவினருடன் விண்வெளிக்கு வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டு திரும்பினார். ஜெப் பெசோசுடன், அவரது சகோதரர் மார்க் பெசோஸ், 1960-களில் விண்வெளி பயண பயிற்சி பெற்ற 82 வயதான வீராங்கனை மேரி வாலஸ் பங்க், நெதர்லாந்தைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஆலிவர் டேமென் ஆகியோரும் விண்வெளிக்கு பயணித்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக்
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி டோக்கியோவில் நடந்தன.
ஆப்கனை கைப்பற்றிய தாலிபான்
ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து ஆட்சி அதிகாரத்தை தாலிபான் அமைப்பினர், கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி கைப்பற்றினர். அதிபராக இருந்த அஷ்ரப் கனி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தலைமறைவு ஆனார்.
ஒமைக்ரான் - புதிய அவதாரம்
தென் ஆப்பிரிக்காவில் தோன்றியுள்ள கொரோனா வேரியண்ட் ஒமைக்ரான், பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் திரிபானது வேகமாக பரவும் எனவும், அதற்கு எதிராக தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் குறைவான செயல் திறனைத் தான் கொண்டிருக்கும் எனவும் விஞ்ஞானிகள் சிலர் தெரிவித்துள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது டெல்டா திரிபை விட பன்மடங்கு அதிகம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்
ராய் புயல்
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் நாட்டில் வீசிய ராய் புயல் காரணமாக அந்நாட்டின் தென் பகுதிகள் மிக மோசமான பாதிப்பைச் சந்தித்தன. மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை வீசிய காற்று காரணமாக ஆயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 100க்கும் மேற்பட்ட நகரங்கள் இருளில் மூழ்கின. மேலும் நூற்றுக் கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்தன. 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மலேஷிய வெள்ளம்
மலேஷிய நாட்டில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் 8 பேர் பலியாகினர். கிழக்கு கடலோரப் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. மலேஷியாவில் கடந்த 70 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஆக மோசமான வெள்ளம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment