குறையும் கொரோனா; அதிகரிக்கும் மரணம்… அதிர்ச்சியில் மக்கள்!
புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 1654 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், புதுச்சேரியில் 4 பேர், மாஹேவில் இருவர் என 6 பேருக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 151-ஆக குறைந்துள்ளது. புதுவையை பொறுத்தவரையில் இதுவரை 1,29,315 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,27,284 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
. புதுச்சேரியில் மேலும் ஒருவர் உயிரிழந்ததால் கொரோனா பலி எண்ணிக்கை 1880-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு அங்கமாக தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், புதுவையில் முதல் தவணை தடுப்பூசியை 8,14,101 பேரும், இரண்டு தவணைகளும் 5,29,478 பேரும் என மொத்தமாக 13,43,579 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சட்டசபையில் புகுந்த சாரைப்பாம்பு… அலறியடித்து ஓடிய அதிகாரிகள்!
நாடு முழுவதும் தற்போது வரை சுமார் 150 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே பொது இடங்களில் வர அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ள நிலையில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை 6-ஆக குறைந்துள்ளதால் சுகாதாரத்துறை ஊழியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
No comments:
Post a Comment