பிரதமர் மோடியை ஆர்.எஸ்.எஸ். இயக்குகிறதா? - மாேகன் பாகவத் பதில் இதுதான்!
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு மத்திய அரசை இயக்குகிறதா என்ற கேள்விக்கு மோகன் பாகவத் பதில் அளித்துள்ளார்
ஹிமாச்சால பிரதேச மாநிலம் தர்மசாலாவில் நடந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் பேசியதாவது:
உலக அளவில் இந்தியா வல்லரசாக இல்லாவிட்டாலும் கொரோனா தொற்றுக்கு பின், உலக நாடுகளுக்கு ஒரு வழிகாட்டியாக திகழ்கிறது. நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளை உலகின் பல நாடுகள் பின்பற்றத் துவங்கி விட்டன. அந்த நாடுகள் இந்தியாவை குரு ஸ்தானத்தில் வைத்து பார்க்கின்றன.
பாஜக தலைமையிலன மத்திய அரசை ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்தவில்லை. பாஜகவின் கொள்கைகள் வேறு. பாஜகவினரின் செயல்பாட்டு முறை வேறு. அதை செயல்படுத்துபவர்களும் வேறு. பாஜகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிலர் ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருக்கிறார்கள்.
அது மட்டும் தான் ஆர்.எஸ்.எஸ். - பாஜக இடையேயான தொடர்பு. மற்றபடி ஊடகங்கள் சொல்வது போல் நாங்கள் பாஜகவை இயக்கும் நேரடி ரிமோட் கன்ட்ரோல் எல்லாம் இல்லை
ஆர்எஸ்எஸ் அமைப்பு 96 வருடங்களாக பல தடைகளை தாண்டி செயல்பட்டு வருகிறது. சமூகத்திற்கு ஒரு தேவை என வரும்போது நாங்கள் அமைதியாக அமர்ந்திருக்க மாட்டோம். உடனடியாக களத்தில் இறங்கி பணியாற்றுவோம். நாங்கள் பாராளுமன்றத்தை மட்டும் நடத்தவில்லை. மக்களுடன் இணைந்து தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்படுகிறோம் என்பதை உணர்த்திஇருக்கிறோம்.
எந்த விளம்பரமும், பொருளாதார தேவையும், அரசாங்கத்தின் துணையும் இன்றி பணி செய்து வருகிறோம். இந்திய மக்களின் மரபணு 40,000 ஆண்டுகளாக மாறாமல் இருக்கிறது. நாம் அனைவருக்கும் ஒரே மூதாதையர் தான். அவர்களால் தான் நமது நாடு செழிப்புடனும், கலாச்சாரத்துடனும் இன்றும் பிரகாசிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment