ஹெலிகாப்டர் விபத்து குறித்து யாரும் கருத்து சொல்ல வேண்டாம்: பொன் ராதாகிருஷ்ணன்
ஹெலிகாப்டர்
விபத்து குறித்து யாரும் தேவை இல்லாமல் கருத்து சொல்ல வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹெலிகாப்டர் விபத்து குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்ட மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் இன்று தென்காசியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து யார் யாரோ கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்றும் அதை புறந்தள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
மேலும்
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து கருத்து சொல்வதற்கு இது உகந்த நேரம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
No comments:
Post a Comment