மரணத்திற்கு முன் பிபின் ராவத் கடைசியாக பேசியது இதுதான்!
நேற்று நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் அவர்கள் கடைசியாக பேசியது என்ன என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
இந்தியாவுக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் நேற்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில்
தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணமடைந்தனர் இந்த விபத்தை நேரில் பார்த்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களில் ஒருவரான சிவகுமார் என்பவர் விபத்து நடந்த இடத்தை நோக்கி தான் விரைந்ததாகவும், அப்போது ஹெலிகாப்டரில் சென்றவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
அவரை நாங்கள் மீட்டபோது தண்ணீர் வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார். அதன் பின்னர்தான் ராணுவத்தினர் அவர்தான்
முப்படை தளபதி பிபின் ராவத் என்று கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்
No comments:
Post a Comment