போதைப் பொருள் வழக்கு : ஆர்யன் கானுக்கு நிபந்தனை தளர்வு
போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
போதை பொருள் கடத்தல் வழக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்ட விவகாரம் தேசிய அளவில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.
ஆர்யன் கான் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஜாமீன் மனு கோரப்பட்டு பல முறை ஒத்திவைக்கப்பட்டு ஒருவழியாக அவருக்கு கடந்த மாதம் ஜாமீன் கிடைத்தது.
இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் ஒவ்வொரு வாரமும் விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லி சிறப்பு விசாரணை அமைப்பு ஆர்யன் கானுக்கு சம்மன் அனுப்பினால் அவர் ஆஜராக வேண்டுமென மும்பை நீதிமன்றம் அவருக்கு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment