மனநோயாளி நிர்வாண கோலம்; தாயாக மாறிய பெண்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 22, 2021

மனநோயாளி நிர்வாண கோலம்; தாயாக மாறிய பெண்!

மனநோயாளி நிர்வாண கோலம்; தாயாக மாறிய பெண்!



திருநெல்வேலி மாவட்டத்தில் ஆடை இல்லாமல் கிடந்த மனநலம் குன்றிய ஆணுக்கு, தனது சால்வையால் வேட்டி கட்டிவிட்டு சோறு ஊட்டிவிட்ட பெண் சமூக ஆர்வலர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேற லெவலாக பகிரப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி டவுன் சொக்கட்டான் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் நந்தினி. இவர், நேற்று முன்தினம் திருநெல்வேலியில் இருந்து கங்கைகொண்டான் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது நெல்லை- மதுரை நான்கு வழிச்சாலையில் கங்கைகொண்டன் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் உடம்பில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவர் தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பச்சை நிற சால்வையை எடுத்து மனநலம் பாதிக்கப்பட்டவரின் இடுப்பில் கட்டிவிட்டார். மேலும் அவருக்கு அப்பகுதியில் உள்ள கடையில் இருந்து உணவு வாங்கி வந்து ஊட்டி விட்டுள்ளார்.

ஒரு தாயை போல் அந்த நபருக்கு நந்தினி காட்டிய அன்பை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து வைரலாக்கி வருகிறார்கள். ஆண்களே செய்ய விரும்பாத ஒரு காரியத்தை பெண்ணாக இருந்து கொண்டு செய்ததை அடுத்து இணையத்தில் நந்தினிக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இந்த உலகில் யார்? எப்படி போனால் நமக்கென்ன? என கடந்து செல்லும் மனிதர்களுக்கு மத்தியில் மனிதநேயமிக்க நந்தினியின் செயல் எல்லோர் மனதிலும் வெகுவாக பதிந்து வருகிறது.

நந்தினி என்ற பெண் தயக்கமின்றி மனதில் எந்த பயமும் இல்லாமல் தன்னுடைய நோக்கம் உதவி என்று மட்டும் எண்ணி செயல்பட்டு வருகிறார். ஒரு பெண் மனம் நலம் பாதிக்கப்பட்ட ஆணுக்கு இது மாதிரியான உதவி செய்ததை கண்டு பொதுமக்கள் வெகுவாக அவரை பாராட்டி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad