பொங்கல் பரிசு தொகை உறுதி - ரேஷன் அட்டைதார்களுக்கு ஹேப்பி நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, December 22, 2021

பொங்கல் பரிசு தொகை உறுதி - ரேஷன் அட்டைதார்களுக்கு ஹேப்பி நியூஸ்!


பொங்கல் பரிசு தொகை உறுதி - ரேஷன் அட்டைதார்களுக்கு ஹேப்பி நியூஸ்!


பொங்கல் பரிசுத் தொகை தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், 21 பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என, தி.மு.க., தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, சுமார் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது.

20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல், ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

முன்னதாக, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை ரொக்கப் பரிசு தொடர்பான அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது, பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் தொடர்ச்சியாக, பொங்கல் தொகுப்புடன், ரொக்கமும் வழங்க அவர் ஆலோசனை செய்து வருவதாக, ஏற்கனவே, சமயம் தமிழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் சென்னை மண்டலத்தின் கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணை பதிவாளர் ஆகியோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குவது, முன்னேற்பாடுகள் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில், பயனாளி ஒருவருக்கு 505 ரூபாய் செலவில் 2,15,48,060 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரத்து எண்பத்தெட்டு கோடியே பதினேழு லட்சத்து எழுபதாயிரத்து முந்நூறு ரூபாய் செலவில் வழங்க ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad