மேகதாது அணை விவகாரம்… காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்த பி.ஆர்.பாண்டியன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, December 27, 2021

மேகதாது அணை விவகாரம்… காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்த பி.ஆர்.பாண்டியன்!

மேகதாது அணை விவகாரம்… காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்த பி.ஆர்.பாண்டியன்!


காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டங்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும் என பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேகதாதுவில் அணைக்கட்ட ஜனவரி 19 ஆம் தேதி போராட்டம் நடத்த இருக்கும் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, தமிழகத்தில் இருந்து பேரணி செல்லபோவதாக தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற ஜனவரி 19 ஆம் தேதி மேகதாதுவில் முற்றுகை போராட்டம் நடத்த போவதாக கர்நாடகா காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.

இதனிடையே கர்நாடக காங்கிரஸ் கட்சியின் இப்போராட்டத்திற்கு, தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாகையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கும், தமிழக காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராகவும், மேகதாதுவில் அனைக்கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிஆர்.பாண்டியன் கூறியதாவது:
“ மேகதாதுவில் அணைக்கட்ட வலியுறுத்தி ஜனவரி 19 ஆம் தேதி மேகதாதுவில் காங்கிரஸ் கட்சி நடத்தும் போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

மேலும் ஜனவரி 18 ஆம் தேதி திருவாரூரில் இருந்து சேலம் - தர்மபுரி - ஓசூர் மேகதாது சென்று எதிர்ப்பு போராட்டம் நடத்த உள்ளோம். தமிழக அரசு ராசிமணலில் அணை கட்ட வேண்டும், காங்கிரஸ் கட்சி போராட்டத்தை கைவிட வேண்டும், தமிழக காவிரி விவசாய சங்கத்தையும், தமிழக விவசாயிகளையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ்.அழகிரிக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.

கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரிக்கிறார். தொடர்ந்து, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான போராட்டங்களை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் முன்னெடுக்கும்”, இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad