குற்றாலம் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்!
தமிழகத்தின் சுற்றுலா பகுதிகளில்
ஒன்றான குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை தென்காசி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்வருமாறு:
சுற்றுலா பயணிகளுக்கு இடையே குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்களுக்கு மட்டுமே குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும்.
ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் பெண்கள்
மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கப்படும்.
பழைய குற்றாலத்தில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படும்.
சிசிடிவி கேமரா மூலம் சுற்றுலா பயணிகளின் வருகை கண்காணிக்கப்படும்.
No comments:
Post a Comment