கூலிங் க்ளாஸ் போட்டு கோவிலுக்குள் கேக் வெட்டிய அதிகாரி: இந்து அமைப்புகள் கடும் கோபம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 21, 2021

கூலிங் க்ளாஸ் போட்டு கோவிலுக்குள் கேக் வெட்டிய அதிகாரி: இந்து அமைப்புகள் கடும் கோபம்!

கூலிங் க்ளாஸ் போட்டு கோவிலுக்குள் கேக் வெட்டிய அதிகாரி: இந்து அமைப்புகள் கடும் கோபம்!



கொடுமுடி கோவில் உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி கேக் வெட்டிய செயல் அலுவலரை கண்டித்து இந்து முன்னணி முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மும்மூர்த்தி ஸ்தலம் எனப்படும் அருள்மிகு மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ரமேஷ் என்பவர் செயல் அலுவலராக பணியில் உள்ளார். இவர் இக்கோவிலில், கடந்த 9 ஆம் தேதி சரவணன் என்பவர் கண்காணிப் பாளராக பணியில் சேர்ந்து உள்ளார். இவர் மாற்றுத்திறனாளி ஆவார்.
இவர் பணியில் சேர்ந்ததை கொண்டாடும் விதமாக செயல் அலுவலர் ரமேஷ் தலைமையில் கோவில் பணியாளர்கள் அனைவரும் மகுடேசுவரர் கோவிலின் உள்ளே அம்மன் சன்னதி முன்புறம் டேபிள் போட்டு மெழுகுவத்தி ஏற்றி கேக் வெட்டி கொண்டாடி கை தட்டி மகிழ்ந்தார்கள். செயல் அலுவலர் ரமேஷ் கண்காணிப்பாளர் சரவணனுக்கு கேக் ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் .

இந்த புகைப்படங்கள் ஈரோடு மாவட்ட வாட்ஸ் அப் குரூப்களில் டிரெண்டாக பரவி வருகிறது. இதனை பார்த்த இந்து முன்னணியினர் கோவில் முன் பிரகாரத்தில் முட்டை கலந்த கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்கள்.இது பக்தர்களின் மனதை புண்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மிக அப்பட்டமான ஆகம விதிமுறை மீறலாகும். இவர் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை செய்யும் தகுதியை இழந்துவிட்டார். செயல் அலுவலர் மற்றும் இதில் கலந்து கொண்ட கோவில் பணியாளர்கள் அனைவரையும் இந்து சமய அறநிலையத் துறை உடனே இவர் களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 22 ஆம் தேதி மகுடேசுவர் கோவில் முன்பு முற்றுகை போராட்டம் அறிவித்து உள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad