கிரிப்டோகரன்சி: பயமா? எனக்கா? மாஸ் காட்டும் காயின் ஸ்விட்ச் கூபர்!
இந்திய கிரிப்டோகரன்சி வர்த்தக தளமான காயின் ஸ்விட்ச் கூபர் (Coinswitch Kuber) புதிதாக ஐந்து கிரிப்டோ சொத்துக்களை அதன் வர்த்தக தளத்தில் இணைத்துள்ளது
இந்திய கிரிப்டோ வர்த்தக தளமான காயின் ஸ்விட்ச் கூபர் வர்த்தக தளம் அதிகப்படியான முதலீட்டாளர்களின் வரவேற்பினைக் கண்டு மேலும் ஐந்து புதிய கிரிப்டோ சொத்துக்களை வர்த்தகம் செய்ய இணைத்துள்ளது. ஏற்கனவே காயின் ஸ்விட்ச் கூபர் 75 கிரிப்டோ சொத்துக்களை வர்த்தகம் செய்து வந்தது. தற்பொழுது இந்த ஐந்து புதிய காயின்களுடன் சேர்ந்து 80 கிரிப்டோ சொத்துக்களை காயின் ஸ்விட்ச் கூபர் வர்த்தக தளம் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளது.
பட்டியலிடப்பட்டுள்ள ஐந்து புதிய கிரிப்டோ சொத்துக்கள் டீசென்ட்ராலேண்ட் (MANA), காலா (GALA), ரெக்(REQ), கோடி (COTI) மற்றும் தி சாண்ட்பாக்ஸ் (SAND) ஆகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட கிரிப்டோகரன்சிகளில் MANA, GALA மற்றும் SAND ஆகியவை பிரபல ஆன்லைன் கேம்களில் இருந்து உருவாக்கப்பட்ட கிரிப்டோ டோக்கன்களாகும். இது மெட்டாவர்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகம் வளர்ந்து வருவதால், கூபர் முதலீட்டாளர்களுக்கு கிரிப்டோ கல்வி மற்றும் பயிற்சி வழங்கவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என காயின் ஸ்விட்ச் கூபரின் நிறுவனர் மற்றும் CEO ஆஷிஷ் சிங்கால் கூறியுள்ளார்.இந்திய அரசு கிரிப்டோகரன்சி குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. மேலும், கிரிப்டோகரன்சி மசோதா நடப்பு குளிர்காலக் கூட்டத் தொடரில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
கிரிப்டோகரன்சி தடை செய்யப்படலாம் எனவும் பேசப்பட்டது. இந்நிலையில் காயின் ஸ்விட்ச் கூபர் நிறுவனத்தின் இந்த தடாலடி அறிவிப்புகள் இந்திய கிரிப்டோ முதலீட்டாளர்களிடையே ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது.
No comments:
Post a Comment