வம்ப வளக்காத்தீங்க: ஸ்டாலின் போட்ட கண்டிஷன்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 21, 2021

வம்ப வளக்காத்தீங்க: ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!

வம்ப வளக்காத்தீங்க: ஸ்டாலின் போட்ட கண்டிஷன்!




பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் சில உத்தரவுகளை போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்படுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வருகிற ஜனவரி மாதம் 12ஆம் தேதி தமிழக வரவுள்ளார். தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்த பிறகு, முதன்முதலாக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளதால், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததும், ஒன்றிய அரசு முழக்கத்தை முன்வைத்து, மாநில உரிமைகளை அதிகம் பேசியது.

இந்த சூழலில் தமிழ்நாடு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடியும், ஸ்டாலினும் ஒரே மேடையில் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதால், பிரதமரிம் தமிழ்நாடு விசிட் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டாலின் மோடி பங்கேற்கும் நிகழ்வில் நீட் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக வாய்ப்புள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், மேடையில் வைத்தே சில விஷயங்களை பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வலியுறுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொதுவாகவே பிரதமர் மோடி தமிழகம் வரும் போதெல்லாம், கோ பேக் மோடி #gobackmodi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட்ட் செய்யப்படும். தமிழர்களின் கலாசாரம், திருவள்ளுவர் என எங்கு சென்றாலும் தமிழ் மக்கள் பற்றி பிரதமர் மோடி புகழ்ந்து பேசினாலும், அவருக்கு தமிழகத்தில் எதிர்ப்பே கிளம்பி வருகிறது. அதேசமயம், பாஜகவினர் #TNWelcomesPMModi என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்குவதை வழக்கமாக கொண்டிருப்பர்.

திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது, கருப்பு பலூன்களை பறக்க விட்டு, #gobackmodi-யை உடன்பிறப்புகள் உக்கிரமாக கையாள்வர். திமுகவினர் மட்டுமல்லாமல் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் சமூக வலைதளங்களில் சலைக்காமல் எதிர்ப்பை பதிவு செய்வார்கள்.
ஆனால், திமுக ஆட்சியமைந்ததும் என்னதான் மத்திய அரசை சீண்டினாலும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுடன் நட்பாக இருக்கவே விரும்புகிறார். திமுக எம்.பி.க்களும் டெல்லியில் சுமூகமான போக்கையே கடைபிடித்து வருகின்றனர். ஸ்டாலினின் இத்தகைய செயல்கள் பிரதமர் மோடிக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடியிடம் இந்த மெசேஜ் பாஸ் செய்யப்பட்டுள்ளது. அவரும் திமுக அரசுடன் இணக்கமான போக்கையே விரும்புவதாக டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad