‘வந்துட்டேனு சொல்லு’…பழைய பார்முக்கு திரும்பும் ரவி சாஸ்திரி: விளம்பரம் மூலம் தகவல்..வீடியோ இதோ! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 21, 2021

‘வந்துட்டேனு சொல்லு’…பழைய பார்முக்கு திரும்பும் ரவி சாஸ்திரி: விளம்பரம் மூலம் தகவல்..வீடியோ இதோ!

‘வந்துட்டேனு சொல்லு’…பழைய பார்முக்கு திரும்பும் ரவி சாஸ்திரி: விளம்பரம் மூலம் தகவல்..வீடியோ இதோ!



இந்திய அணி முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.இந்திய அணிக்கு 2017 முதல் 2021 டி20 உலகக் கோப்பை வரை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி, ஓய்வை அறிவித்துவிட்டார். இவரது வழிகாட்டுதலில் இந்திய அணி மிகச்சிறப்பாகச் செயல்பட்டது. குறிப்பாக, ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டுமுறை டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது. இங்கிலாந்து மண்ணிலும் மிரட்டலாக விளையாடி அசத்தியது. இப்படி, வெளிநாட்டு மண்களிலும் இந்தியாவை பலமிக்க அணியாக மாற்றி வைத்தார்.

இவர் பயிற்சியாளராக வருவதற்கு முன்பு, கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வந்தார். டி20 உலகக் கோப்பையில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர் அடித்தபோதும், 2011 உலகக் கோப்பையில் மகேந்திரசிங் தோனி பினிஷிங் ஷாட் சிக்ஸர் அடித்து வெற்றிபெற்றுக் கொடுத்தபோதும், இவர்தான் வர்ணனை செய்தார். அந்த சம்பவங்கள் மனதில் தோன்றும் போதெல்லாம், இவரது குரலும்தான் கூடவே ஞாபகத்தில் நிற்கும். அந்த அளவுக்கு சிறப்பாக வர்ணனை செய்து, தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார்.

இவர் இந்திய அணிக்கு பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு, வர்ணனை பணியை தொடரவில்லை. இந்நிலையில், அவர் மீண்டும் வர்ணனை பணிக்கு திரும்பியுள்ளதை, ஸ்டார் நிறுவனம் விளம்பரம் மூலம் சூசகமாக அறிவித்துள்ளது. அந்த விளம்பரத்தில் அவர் எதையோ சமைத்து, ருசி பார்ப்பது போல் இருக்கிறது. இந்த நிறுவனம்தான் தென்னாப்பிரிக்கா தொடரை நேரலை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இதனால், தென்னாபிரிக்க தொடரின்போதே இவர் மீண்டும் தனது வர்ணனை பணியை தொடங்கிவிடுவார் எனத் தெரிகிறது.

இந்திய அணிக்காக ரவி சாஸ்திரி மொத்தம் 80 டெஸ்ட்களில் 383 ரன்களை குவித்துள்ளார். தனி நபர் அதிகபட்சம் 206 ரன்கள் ஆகும். 151 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல் 150 ஒருநாள் போட்டிகளில் 3108 ரன்களும் 129 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். இதில், இவரது தனி நபர் அதிகபட்சம் 109 ஆகும்.

No comments:

Post a Comment

Post Top Ad