IND vs SA: ‘புயல்வேக புலி’ நோர்க்கியா விலகல்…இவருக்கான மாற்று வீரர் ‘இன்னும் பயங்கரமானவராம்’! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, December 21, 2021

IND vs SA: ‘புயல்வேக புலி’ நோர்க்கியா விலகல்…இவருக்கான மாற்று வீரர் ‘இன்னும் பயங்கரமானவராம்’!

IND vs SA: ‘புயல்வேக புலி’ நோர்க்கியா விலகல்…இவருக்கான மாற்று வீரர் ‘இன்னும் பயங்கரமானவராம்’!




டெஸ்ட் தொடரிலிருந்து தென்னாப்பிரிக்க பௌலர் நோர்க்கியா விலகியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா செல்லும் இந்திய அணி டிசம்பர் 26ஆம் தேதிமுதல் தலா மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஒருநாள் தொடர், அடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடவுள்ளது.

முதல் போட்டி வருகிற 26ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கவுள்ளது. இந்த மைதானத்தில் நடைபெற்ற 26 டெஸ்ட் போட்டிகளில், தென்னாப்பிரிக்க அணி 21 போட்டிகளில் வெற்றியை பெற்றுள்ளது. 3 போட்டிகள் டிரா, 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. இந்த தோல்விகளும் 2015-க்கு முன்புதான். இந்த மைதானத்தில் இந்தியா, 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலுமே தோற்றுள்ளது. இப்படி தென்னாப்பிரிக்கா, தனக்குச் சாதகமான மைதானத்தில் முதல் போட்டியை நடத்தி, இந்தியாவுக்கு துவக்கத்திலேயே பலத்த அடி கொடுக்க முடிவு செய்துள்ளது.

மேலும், இந்த பிட்ச்களில் தென்னாப்பிரிக்க பௌலர்கள் காகிசோ ரபாடா, ஆன்ரிக் நோர்க்கியா போன்றவர்கள் தொடர்ந்து 150 வேகத்தில் பந்துகளை வீசுவார்கள் என்பதால், இந்திய மண்ணில் ஸ்பின்னர்களை அதிகம் ஆடி பழக்கப்பட்ட இந்திய அணி படுமோசமாக திணற வாய்ப்புள்ளது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், தொடர்ந்து 150 வேகத்தில் பந்துவீசக் கூடிய ஆன்ரிக் நோர்க்கியா, காயம் காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.

இருப்பினும், ஏற்கனவே இருக்கும் 20 பேர் கொண்ட அணியில் நோர்க்கியாவுக்கான மாற்று வீரர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயர் டுவான் ஓலிவியர். மொத்தம் 10 போட்டிகளில் மட்டுமே, அதுவும் 2019ஆம் ஆண்டுவரைதான் தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணிக்காக விளையாடியிருக்கிறார். சமீபத்தில் இவர், 4 முதல்தரப் போட்டிகளில் பங்கேற்று 11.14 சராசரியுடன் 28 விக்கெட்களை குவித்திருக்கிறார். பெஸ்ட் 9/95 ஆகும். நோர்க்கியா வேகத்திலும் பந்துவீசக் கூடியவர். இதனால்தான், நோர்க்கியாவுக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படாமல் ஓலிவியரை வைத்து சமாளிக்க அந்த அணி நிர்வாகம் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


தென்னாப்பிரிக்க அணி: டீன் எல்கர் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), ககிசோ ரபாடா, சரேல் எர்வீ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, ஐடன் மார்க்ரம், வியாகன் முல்டர்ஸ், , ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், க்ளென்டன் ஸ்டூர்மேன், ப்ரீனெலன் சுப்ரயன், சிசாண்டா மாகலா, ரியான் ரிக்கல்டன், டுவான் ஆலிவியர்.

No comments:

Post a Comment

Post Top Ad