IPL 2022: ‘மெகா ஏலம்’…சிஎஸ்கே தட்டித்தூக்கவுள்ள 5 பேர்: மும்பை வீரர்களுக்கு ஸ்கெட்ச்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, December 31, 2021

IPL 2022: ‘மெகா ஏலம்’…சிஎஸ்கே தட்டித்தூக்கவுள்ள 5 பேர்: மும்பை வீரர்களுக்கு ஸ்கெட்ச்!

IPL 2022: ‘மெகா ஏலம்’…சிஎஸ்கே தட்டித்தூக்கவுள்ள 5 பேர்: மும்பை வீரர்களுக்கு ஸ்கெட்ச்!

\



மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் யார் யாரை வாங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.அடுத்த ஆண்டுமுதல் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் இணைக்கப்பட்டு, மொத்தம் 10 அணிகள்வரை ஐபிஎலில் பங்கேற்கவுள்ளது. புதிய இரண்டு அணிகள் சேர்க்கப்படுவதால், அந்த அணிகளுக்கு வீரர்களை தேர்வு செய்யும்விதமாக 15ஆவது சீசனுக்கு முன்பு மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இதனால், ஒரு அணி 3 உள்நாட்டு வீரர்கள் + ஒரு வெளிநாட்டு வீரர் அல்லது தலா இரண்டு உள்,வெளிநாட்டு வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்நிலையில், எந்தெந்த அணிகள் யார் யாரை தக்கவைத்துள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிஎஸ்கே:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரவீந்திர ஜடேஜா (16 கோடி), மகேந்திரசிங் தோனி (12 கோடி), மொயின் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. சுரேஷ் ரெய்னா, ஃபாஃப் டூ பிளஸியை விடுவித்துள்ளது. இந்நிலையில், மெகா ஏலத்தின்போது சிஎஸ்கே, 5 பேரை டார்கெட் செய்து தட்டித்தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

5.டிரென்ட் போல்ட்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வேகப்பந்து வீச்சு பட்டாளத்தை இழந்துள்ளது. லுங்கி நெகிடி, தீபக் சஹார் போன்றவர்களை தக்கவைக்கவில்லை. இந்த இழப்புகளை சரிசெய்ய, அவர்கள் அனுபவமிக்க பௌலரான டிரென்ட் போல்ட்டை வாங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. போல்ட், கடந்த இரண்டு சீசன்களிலும் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். சமீபத்தில் நியூசிலாந்தில் ஒரு உள்ளூர் போட்டியில், கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து, அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

4.சாம் கரன்:
ஆல்-ரவுண்டர் சாம் கரனை, சிஎஸ்கேவால் தக்கவைக்க முடியவில்லை. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டிலும் சிறந்த பங்களிப்பை அளிக்க கூடியவர். அவரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர, ஏலத்தின்போது அந்த அணி தீவிரமாகப் போராடும் எனக் கருதப்படுகிறது


3.இஷான் கிஷன்:

சிஎஸ்கே ஓபனர் ஃபாஃப் டூ பிளஸி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். கடந்த சீசனில் அதிக ரன்கள் அடித்தோர் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்து அசத்தினார். அவரை தக்கவைக்கவில்லை. இவர் இடத்தை பூர்த்திசெய்ய, நீண்ட காலம் விளையாடும் அளவுக்கு ஓபனர் தேவை. இஷான் கிஷன் அந்த இடத்திற்கு சரியான தேர்வாக இருப்பார் என்பதால், அவரை சிஎஸ்கே டார்கெட் செய்ய வாய்ப்புள்ளது.

2.ராகுல் சஹார்:

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்தை சுழற்றிய ராகுல் சஹார் தக்கவைக்கப்படவில்லை. சென்னை மைதானம் சுழலுக்கு சாதகமானதாக இருக்கிறது. இதனால், ராகுல் சாஹரை கொண்டுவந்தால், மிடில் ஓவர்களில் சிஎஸ்கேவுக்கு பிரச்சினைகள் குறையும். இவரால், நீண்ட காலத்திற்கு கிரிக்கெட் விளையாட முடியும்.

1.ஷர்தூல் தாகூர்:

கடந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேவைப்பட்ட நேரங்களில் எல்லாம், விக்கெட்டை எடுத்துக் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த ஷர்தூல் தாகூர் தக்கவைக்கப்படவில்லை. இவரால் பேட்டிங்கிலும் அதிரடி காட்ட முடியும். இதனால், சிஎஸ்கே இவரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர, அதிக தொகைகளை செலவுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad