Rain: விவசாயிகளுக்கு சோதனை மேல் சோதனை!
விசாயிகளுக்கு பெரும் சேதத்தை தந்த 2021ம் ஆண்டு முடியும் தருவாயில் மிச்சம் மீதி இருந்த பயிர்களையும் வெள்ளத்தில் மூழ்கடித்து செல்வதை வேதனையுடன் கடக்கின்றனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக 11 செ.மீ வரையிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக 11 செ.மீ வரையிலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
கடந்த நவம்பர் மாதம் பெய்த கன மழையில் தப்பிய பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழையின் காரணமாக பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளது.
மேலும் வடிகால் ஆறுகள், பாசன ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முழுவதுமாக தண்ணீர் நிரம்பியதால் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் கொள்ளிடத்தின் மேற்குப் பகுதியில் உளள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேரும் மழை நீரானது இப்பகுதியின் வழியாகவே கடலுக்கு செல்ல வேண்டும் என்பதால் இப்பகுதியை சுற்றி உள்ள 5 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி முற்றிலுமாக சாய்ந்து தண்ணீரில் மூழ்கி உள்ளது.
இனி இந்த பயிர்களை காப்பாற்றவே முடியாது என்று கவலை தெரிவித்த விவசாயிகள் தங்கள் பகுதியில் வேளாண் துறை அதிகாரிகளும் காப்பீடு நிறுவன அதிகாரிகளும் உரிய ஆய்வு செய்து முழு காப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment