10 முதல் 12ஆம் வகுப்பு வரை விடுமுறை - தமிழக அரசு சர்ப்ரைஸ் அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா தொற்று 25 ஆயிரத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதையொட்டி ஞாயிறு முழு ஊரடங்கு மற்றும் தினசரி இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 முதல் 9ஆம் வகுப்பு வரை வீட்டிலிருந்தே கல்வி கற்க அறிவுறுத்தப்பட்டது. பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு 10, 11 மற்றும் 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் மட்டும் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் வரும் 19 அன்று தொடங்கி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நடக்கவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment