ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம்; விரைவில் வருகிறது அறிவிப்பு? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 16, 2022

ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம்; விரைவில் வருகிறது அறிவிப்பு?

ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம்; விரைவில் வருகிறது அறிவிப்பு?


தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.5 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு எங்கே? என்று கேட்டு, முதல்வர் ஸ்டாலின் படத்துடன் மூலைக்கு மூலை போஸ்டர் ஒட்டப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீப நாட்களாக பாஜ-திமுக கட்சியினரிடையே போட்டி போட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வரும் சம்பவங்களால், பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது.

முதியோர்களின் பசியை அடக்கிய சாமி; சமூக சேவகருக்கு குவியும் பாராட்டு!

பாஜகவுக்கு செல்வாக்கு மிகுந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுகவுக்கு எதிரான அரசியல் நடத்துவதில் அதிமுகவை விட பாஜக முன்னணியில் உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த பொங்கல் பண்டிகையின்போது, பரிசுப் பொருட்களுடன் ரொக்கத் தொகை வழங்காததை பொதுமக்களிடையே விவாத பொருளாக்கும் வகையில், பாஜக சார்பில் மாவட்டம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.அந்த சுவரொட்டியில், ‘தமிழக மக்களுக்கு போலி வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியல் அரசே! பொங்கல் பரிசு ரூ. 5 ஆயிரம் எங்கே?’ என்கிற வாசகம், குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த போஸ்டருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், ஒன்றிய பாஜக அரசே! தேர்தலின்போது ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்று சொன்னது என்னாச்சு?’ என கேள்வி எழுப்பி பாஜ சுவரொட்டிக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
திமுகவின் பதிலடிக்கு அடுத்த பதிலடியாக பாஜக மீண்டும் மற்றொரு சுவரொட்டியை ஒட்டி பரபரப்பை எகிற விட்டுள்ளது. அந்த சுவரொட்டியில், 5 சவரன் கூட்டுறவு சங்க நகைக் கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்றவை எங்கே? தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இரு கட்சிகளுக்கு இடையிலான சுவரொட்டி விவாதத்தால் கன்னியாகுமரி மாவட்ட அரசியல் களம் பரபரப்பாக காட்சியளிக்கிறது. இந்த தகவல் திமுக மேலிடம் வரை சென்றதில், முதல்வர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே பொங்கல் பரிசு தொகை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பொதுமக்களை வெகுவாக தூண்டிவிட்டுள்ளதாக திமுக மேலிடம் கருதுகிறது. இந்த சூழலில் பொங்கல் பரிசு தொகை கிடைக்காத பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.

அப்படி இருக்கையில், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக ரூ.5 ஆயிரம் பொங்கல் பரிசு பணம் உள்பட பல்வேறு விவகாரங்களை தோண்டும் வகையில் பாஜக சார்பில் போஸ்டர் ஒட்டி இருப்பதால் ரேஷன் கார்டுகளுக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை கொடுத்து, மக்களின் மனதை சாந்தப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக, தகவல் வெளியாகி இருக்கின்றன. எனவே, இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.



No comments:

Post a Comment

Post Top Ad