சுபாஷ் சந்திரபோஸ் 125வது பிறந்தநாள்… புதுச்சேரி ஆளுநர் சிறப்பு மரியாதை!
புதுச்சேரியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினம் புதுச்சேரி அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. லாஸ்பேட்டையில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவ சிலைக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேற்கு வங்கத்தில் 1897ல் ஜனவரி 23 செல்வந்த குடும்பத்தில் பிறந்திருந்து. அடிமை ஒழிப்பு, சுதந்திர உள்ளிட்டவைகளுக்காக ஏழை, எளிய மக்களின் பக்கம் நின்றவர் சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜியின் பெற்றோர் அவரை லண்டனுக்கு அனுப்பி ICS(ஆட்சியர்) படிக்கவைத்தனர்.
ஆனால்,ஆங்கிலேயருக்கு மண்டியிட்டு செய்யக்கூடிய வேலையை என்னால் செய்ய முடியாது என்று சினம் கொண்ட சுபாஷ் சந்திரபோஸ் அந்த பணியை தூக்கி எறிந்தார். மேலும், இளைஞர்களை ஒன்றிணைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ராணுவப் படை ஒன்றை உருவாக்கி சரித்திரம் படைத்தவர் சுபாஷ் சந்திரபோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment