கரையில் குத்தாட்டம்; ஊரடங்கை கொண்டாடிய டால்பின்கள்!
வரலாற்றில் முதன்முறையாக, ஆழ்கடலில் இருந்து கரைக்கு வந்த 40க்கு மேற்பட்ட டால்பின்கள் கூட்டம் கன்னியாகுமரி ஞாயிறு முழு ஊரடங்கை குத்தாட்டம் போட்டு கொண்டாடின. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
அதன்பிறகு கொரோனாவின் தாக்கம் குறைந்து வந்தது. இதனால் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து செயல்படுத்தியது. இதற்கிடையில் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
இதனால் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி கடைகள், ஓட்டல்கள், சினிமா திரையங்கு 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு என்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்த இரவு நேர ஊரடங்கு தமிழகத்தில் தற்போது அமலுக்கு வந்துள்ளது. இந்த விதிமுறைகள் உடனடியாக வந்ததை அடுத்து தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கன்னியாகுமரி அருகே கோவளம் மீனவ கிராமத்தை ஒட்டிய கடல் பகுதியில் இன்று மாலையில் திடீரென சுமார் 40 டால்பின் மீன்கள் கூட்டமாக அலைகளுக்கு இடையே கடலோரமாக ஏந்திய வண்ணம் காணப்பட்டன.
இதை கண்டு அப்பகுதி மக்கள் கரையோரம் குவிந்து கண்டு கொண்டிருந்த நிலையில் ஒரு டால்பின் மீன் உயிரற்ற நிலையில் கரை ஒதுங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி கடலில் டால்பின் மீன்கள் கூட்டமாக ஏந்திய வண்ணம் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
வழக்கமாக கன்னியாகுமரி வட்டார கடலோர பகுதிகளில் இதுபோன்ற டால்பின் மீன் கூட்டம் காணப்படாத நிலையில் முதன்முதலாக இப்பகுதியில் இவ்வகை மீன்கள் வந்ததால் அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆச்சரியத்தோடு கண்டுகளித்தனர்.
டால்பின் மீன்கள் கூட்டமாக வந்ததை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் வேகமாக பரவி வருகிறது.
No comments:
Post a Comment