1,400 காவலர்களுக்கு பூஸ்டர் டோஸ்… காவல் ஆணையர் உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, January 11, 2022

1,400 காவலர்களுக்கு பூஸ்டர் டோஸ்… காவல் ஆணையர் உத்தரவு!

1,400 காவலர்களுக்கு பூஸ்டர் டோஸ்… காவல் ஆணையர் உத்தரவு!


1,400 காவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரானா நோய்த்தொற்றின் மூன்றாவது அலை மற்றும் கொரோனாவின் உருமாறிய ஒமைக்ரான் நோய்த்தொற்றின் தாக்கம் தீவிரமாக பரவிவரும் நிலையில், தமிழகம் முழுவதும் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போட தீர்மானித்து, அதன்படி முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம் துவங்கப்பட்டது.

இந்நிலையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தும் முகாமை துவக்கி வைத்தார். காவல்துறையில் பணியாற்றும் 1400 காவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் கூறியதாவது:
“இரண்டாவது தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள், அதில் இருந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இந்த பூஸ்டர் தடுப்பூசியை செலுத்தி கொள்ள தகுதி ஆனவர்கள்.திருச்சி மாவட்டத்தில் பணியாற்றும் 97 சதவீத காவலர்கள் தடுப்பு ஊசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். மொத்தம் 1400 காவலர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்த உள்ளோம். இதில் 500 காவலர்களுக்கு முதற்கட்டமாக இன்று தடுப்பூசியை செலுத்தியுள்ளோம்”.

No comments:

Post a Comment

Post Top Ad