முறிந்தது தனுஷ் - ஐஸ்வர்யா 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை: கவலையில் ரஜினி ரசிகர்கள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 17, 2022

முறிந்தது தனுஷ் - ஐஸ்வர்யா 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை: கவலையில் ரஜினி ரசிகர்கள்!

முறிந்தது தனுஷ் - ஐஸ்வர்யா 18 ஆண்டு கால திருமண வாழ்க்கை: கவலையில் ரஜினி ரசிகர்கள்!



நடிகர் தனுஷ் மற்றும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவில் பிரபல நடிகராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தனுஷுக்கும் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் பரஸ்பரம் பிரிய உள்ளதாக அறிவித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக இருவரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிட்டுள்ளனர். அதில், '18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்' என்று தெரிவித்துள்ளனர்.

இவர்களின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் ரஜினி ரசிகர்கள் பலரும் 'இந்த வயதில் எங்க தலைவருக்கு எவ்வளவு பெரிய கஷ்டம்' என்ற கவலையில் உள்ளனர். இந்த விஷயத்தை தலைவர் எப்படி தாங்குவார் என சோஷியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் தனுஷ் - ஐஸ்வர்யாவின் திடீர் விவாகரத்து அறிவிப்பு கோலிவுட் வட்டாரத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சமந்தா- நாகசைதன்யா இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தகது.'
'வடசென்னை 2' எப்போது ? - இயக்குனர் வெற்றிமாறன் பதில்!



No comments:

Post a Comment

Post Top Ad