ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்!

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்: 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள்!


பொங்கல் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில், 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கொரோனா மூன்றாவது அலை ஒரு பக்கம் அதிகரித்தாலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மற்ற பண்டிகைகளை விட பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே தொடர் விடுமுறை அதிகமாக விடப்படுவதால் மக்கள் வெளியூர் செல்ல ஆர்வம் காட்டுவர்.


பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்பவர்களுக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது. அதேசமயம் பேருந்துகளில் 75 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 16) அன்று முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்காக தெற்கு ரயில்வேயும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 23 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் 23 ரயில்களின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, கோவை - மன்னாா்குடி (16616, 16615), திருவனந்தபுரம் சென்ட்ரல் - மதுரை (16343, 16344), திருவனந்தபுரம் சென்ட்ரல் - மங்களூா் சென்ட்ரல் (16604, 16603, 16629, 16630), தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் (16866, 16865), தாம்பரம் - நாகா்கோவில் (22657, 22658), சென்னை எழும்பூா் - குருவாயூா் (16127, 16128) சென்னை சென்ட்ரல் - மங்களூா் சென்ட்ரல் (12601),
சென்னை சென்ட்ரல் - மங்களூா் சென்ட்ரல் (22637), சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் சென்ட்ரல் (12695, 12696), சென்னை சென்ட்ரல் - ஆலப்புழா (22639, 22640) ஆகிய ரயில்களில் படுக்கை, குளிா்சாதனம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Post Top Ad