பிரம்மோஸுக்கு அங்கீகாரம்.. ரூ. 2700 கோடிக்கு ஆர்டர் கொடுத்தது பிலிப்பைன்ஸ் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, January 14, 2022

பிரம்மோஸுக்கு அங்கீகாரம்.. ரூ. 2700 கோடிக்கு ஆர்டர் கொடுத்தது பிலிப்பைன்ஸ்

பிரம்மோஸுக்கு அங்கீகாரம்.. ரூ. 2700 கோடிக்கு ஆர்டர் கொடுத்தது பிலிப்பைன்ஸ்



ரூ. 2700 கோடிக்கு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் அரசு ஆர்டர் கொடுத்துள்ளது.
இந்தியாவின் சொந்தத் தயாரிப்பான பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பிலிப்பைன்ஸ் அரசு ரூ. 2782 கோடி அளவுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.

ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரிக்கும் அதி நவீன ஏவுகணைதான் பிரம்மோஸ். இந்த ஏவுகணையை கடலோரப் பாதுகாப்புக்கு பயன்படுத்தலாம். தரையிலிருந்து மட்டுமல்லாமல், கப்பல்கள், விமானத்திலிருந்தும் கூட இந்த ஏவுகணையை செலுத்த முடியும். உலகிலேயே மிகவும் அதி வேகமான ஏவுகணைகளில் பிரம்மோஸும் ஒன்று என்பது முக்கியமானது.

இந்தியாவின் டிஆர்டிஓ நிறுவனமும் ரஷ்யாவும் இணைந்து இந்த ஏவுகணையைத் தயாரிக்கின்றன. ரஷ்யாவின் பி 800 ஏவுகணையை மாதிரியாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் பிரம்மோஸ். பிரம்மோஸ் என்ற பெயர் வந்ததும் கூட சுவாரஸ்யமானதுதான். இந்தியாவின் பிரம்மபுத்திரா மற்றும் ரஷ்யாவின் மாஸ்க்வா ஆகிய இரு நதிகளின் பெயர்களையும் இணைத்துத்தான் பிரம்மோஸ் என்ற பெயரை உருவாக்கினர்.

இந்த பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு தற்போது பிலிப்பைன்ஸ் அரசு ஆர்டர் கொடுத்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 2782 கோடி அளவுக்கு இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. தனது நாட்டின் கடலோரப் பாதுகாப்புக்காக பிரம்மோஸ் ஏவுகணையை வாங்குகிறது பிலிப்பைன்ஸ்.


பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா ஏற்கனவே பல்வேறு முக்கியப் பகுதிகளில் நிலை நிறுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவுடனான எல்லைக் கட்டுப்பாடு பகுதியான லடாக்கிலும், அருணாச்சல் பிரதேசத்திலும் இந்தியா நிறுத்தியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad