பென்சன் பணத்தை எடுக்க சூப்பர் வசதி.. மாநில அரசு அறிவிப்பு!
வீட்டில் இருந்தபடியே பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதியை மேற்குவங்க மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா - ஒமைக்ரான் பிரச்சினைகள் இருக்கும் இந்த சமயத்தில் வங்கிக்குச் செல்வது சற்று ஆபத்தான விஷயம்தான். இதனால் வங்கிகள் தொடர்பான சேவைகள் ஆன்லைன் மூலமாகவே கிடைக்க நிறைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் பென்சன் தொகை. இனி பென்சன் வாங்கும் நபர்கள் தங்களது முழு பென்சன் தொகையையும் வங்கிக்குச் செல்லாமலேயே எடுத்துக்கொள்ளலாம் என்று மேற்குவங்க மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, ஓய்வூதியம் பெறும் நபர்கள் நெட்பேங்கிங் வசதியைப் பயன்படுத்துபவராக இருந்தால் அவர் அதன் மூலமாகவே பென்சன் தொகையை எடுத்துக்கொள்ளலாம். நெட்பேங்கிங் வசதி இல்லாவிட்டாலும் டெபிட் கார்டு மூலம் பென்சன் பணத்தை ஏடிஎம்களில் எடுக்கலாம். இந்த வசதியின் மூலமாக வங்கிக்கு அலைய வேண்டிய சிரமம் குறைந்துள்ளது.
கொரோனா பிரச்சினை இருக்கும் இந்த சமயத்தில் வங்கிக்குச் செல்வது நிறையப் பேருக்கு சிரமமாக உள்ளது. வங்கியில் நோய்த் தொற்று நோய் வந்துவிடுமோ என வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. அதற்காக பென்சன் பணத்தையும் எடுக்காமல் இருக்க முடியாது. இந்த சிரமத்தைக் குறைப்பதற்காகவே தற்போது இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரே பென்சன் பணத்தை இவ்வாறு எடுக்கும் வசதி இருந்தாலும் ஓய்வூதியதாரர் அல்லது குடும்ப ஓய்வூதியதாரர் தனது முழு ஓய்வூதியத்தையும் டெபிட் கார்டு அல்லது நெட்பேங்கிங் மூலம் எடுக்க முடியாது. வாடிக்கையாளர்கள் தங்கள் முழு ஓய்வூதியத்தையும் காசோலை அல்லது வித்டிராவல் ரசீது மூலம் மட்டுமே எடுக்க முடியும். ஆனால் தற்போதைய அறிவிப்பின்படி முழு பென்சன் தொகையையும் நெட் பேங்கிங் அல்லது ஏடிஎம் மூலம் எடுக்கலாம். இந்த வசதி பென்சன் வாங்கும் நபர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment