'300 யூனிட் மின்சாரம் இலவசம்!' - மாஜி முதல்வர் தேர்தல் வாக்குறுதி! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

'300 யூனிட் மின்சாரம் இலவசம்!' - மாஜி முதல்வர் தேர்தல் வாக்குறுதி!

'300 யூனிட் மின்சாரம் இலவசம்!' - மாஜி முதல்வர் தேர்தல் வாக்குறுதி!தேர்தலில் வென்றால் 300 யூனிட் மின்சாரம் இலவசம் என மாஜி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், அனைத்து குடும்பங்களுக்கும் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என, அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தம் 403 சட்டப்பேரவைத் தொகுதிகளை இந்த மாநிலத்தில், அடுத்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. எதிர் வரும் தேர்தலில், பாஜக - சமாஜ்வாதி - காங்கிரஸ் - பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுக்கு இடையே நான்கு முனை போட்டி ஏற்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.

உத்தர பிரதேச மாநிலத்தில் தற்போதே தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. பாஜகவுக்கு வாக்கு கேட்டு பிரதமர் நரேந்திர மோடியும் அடிக்கடி உத்தர பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து பொதுக் கூட்டங்களில் எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகிறார்.

பாஜகவுக்கு போட்டியாக சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றன.

அகிலேஷ் யாதவின் அறிவிப்புக்கு பதிலடி கொடுத்துள்ள உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி அரசு ஒருபோதும் மக்களுக்கு மின்சாரம் வழங்கியதே இல்லை. பிறகு எப்படி இலவசமாக வழங்கும்? என தெரிவித்தார்.

பஞ்சாப், கோவா ஆகிய மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் களமிறங்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, தேர்தலில் வெற்றி பெற்றால் 300 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவித்து விட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் பாணியில், உத்தர பிரதேச மாநிலத்திலும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், அகிலேஷ் யாதவுக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவு இருப்பதாகவும், அவர் முதலமைச்சர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad