ஜன. 31 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? - அரசு திடீர் விளக்கம்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

ஜன. 31 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? - அரசு திடீர் விளக்கம்!

ஜன. 31 முதல் மீண்டும் முழு ஊரடங்கு? - அரசு திடீர் விளக்கம்!



ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது
சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று முதன் முதலில் பரவியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து, சுகாதாரத் துறையை அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தற்போது உலக நாடுகளை ஆட்டிப் படைத்து வருகிறது.

இதற்கிடையே, மேற்கு ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில், கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, கடந்த நவம்பர் மாதத்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது, அலுவலகத்திற்கு செல்வது போன்றவற்றுக்கு மட்டும் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், ஆஸ்திரியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஆஸ்திரிய அதிபர் கார்ல் நெஹாம்மர் கூறியதாவது:
கடந்த நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இனி தேவை இல்லை. ஏனெனில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், கொரோனா பரவலும் குறைந்து வருகிறது.சுகாதாரத் துறை நடவடிக்கைகளுக்காக, கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அவர்களுக்கும் கட்டுப்பாடுகள் விலக்கப்படுகின்றன. பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு உணவகங்கள், பார்களில் அனுமதி வழங்கப்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad