புலம்ப செய்த 34 மாணவர்கள்; ஹெல்த் மினிஸ்டர் ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

புலம்ப செய்த 34 மாணவர்கள்; ஹெல்த் மினிஸ்டர் ஷாக்!

புலம்ப செய்த 34 மாணவர்கள்; ஹெல்த் மினிஸ்டர் ஷாக்!பள்ளி மாணவர்கள் 34 பேர் தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை புலம்ப செய்துள்ளனர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா என்கின்ற கொடிய நோய் பரவி, உலக நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதன் தாக்கம் பெரிய அளவில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில் சுகாதார துறை முழுவீச்சாக உள்ளது.
வலையில் சிக்கிய கருநாகப்பாம்பு; வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது!

தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மே மாதம் 30 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் பலனாக ஜூன் மாதம் முதல் படிப்படியாக கொரோனா குறைய தொடங்கியது.

கடந்த 2 மாதமாக ஆயிரத்துக்கும் கீழ் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது. ஆயுத பூஜை, தீபாவளிக்கு பிறகு கொரோனா பரவுவது மேலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.

இப்போது கொரோனா உருமாறி ஒமைக்ரான் வைரஸ் என்ற பெயரில் அச்சுறுத்தி வருகிறது. கூடவே இதன் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ? என்ற அச்சம் நிலவுகிறது.


இந்நிலையில் ஒரே பள்ளியை சேர்ந்த 34 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சென்னை மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. பள்ளி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இங்கு தங்கி படித்தும் வரும் மேற்கு மாம்பலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனது வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சென்றுவிட்டு மீண்டும் விடுதிக்கு வந்துள்ளார்.

அதன் பிறகு டிசம்பர் 28ம் தேதி அந்த மாணவருக்கு சளி, காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விடுதியில் தங்கியிருந்த 71 மாணவர்களுக்கும் உடனடியாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது 24 மாணவர்கள், 10 மாணவிகள் என 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
இதனை சற்றும் எதிர்பாராத கல்வி அதிகாரிகள் கொரோனா பாதித்த மாணவ மாணவிகளை உடனடியாக மீட்டு ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனின் சொந்த தொகுதி சைதாப்பேட்டையில் இப்படிப்பட்ட நிலைமை என்பதால் பொதுமக்கள் மத்தியில் கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:

Post a Comment

Post Top Ad