IND vs SA: ம்கும்…இப்படியா மழை பெய்யணும்: 2ஆவது போட்டிக்கான வானிலை..செம்ம ஷாக்!
இரண்டாவது போட்டிக்கான வானிலை நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றது. இந்த மைதானத்தில் இந்திய அணி வெற்றிபெற்றதே கிடையாது. தென்னாப்பிரிக்க அணிதான் தொடர் வெற்றிகளை பெற்று, செஞ்சூரியனை கோட்டையாக வைத்திருந்தது. இந்நிலையில், இந்திய அணி கடுமையாக போராடி, 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி, நாளை ஜோகனஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெற்றால், இந்திய அணி தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துவிடும்.
வானிலை:
இரண்டாவது போட்டி நடைபெறவுள்ள ஜோகன்பர்க் நகரில், தற்போதைய வானிலை மிகவும் மோசமாக மாறியுள்ளது. நேற்று இரவு பலத்த மழை பெய்த நிலையில், இன்று இரவும் அதேபோல மழை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளதால், நாளை துவங்கவுள்ள முதல்நாள் ஆட்டம் காலதாமதமாகத் துவங்கும் என கூறப்படுகிறது.
அடுத்த 2 நாட்கள்:
முதல்நாள் கூட பரவாயில்லை. இரண்டாவது நாளில் 80% மழைக்கு வாய்ப்புள்ளதால், அன்றைய தினம் முற்றிலும் ரத்து செய்யப்படலாம். 3ஆவது நாளின்போது 40 சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்பதால், அன்றைய தினம் இரண்டு செஷன்கள் வரை மட்டுமே ஆட்டம் நடைபெற சாத்தியம் இருப்பதாக தெரிகிறது.
கடைசி 2 நாட்கள்:
4ஆவது நாள் மிகவும் மோசம். அன்றைய தினம் முழுவதும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடைசி நாளில் ஒரு செஷன் மட்டுமே நடைபெற சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், இந்த போட்டி டிரா ஆவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாகவே கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
No comments:
Post a Comment