கொரோனா: உலகம் முழுவதும் 34.98 கோடியாக உயர்வு; அமெரிக்காவில் ஒரே நாளில் 3.12 லட்சம் பேர் பாதிப்பு!
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34.98 கோடியாக அதிகரித்துள்ளது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே, தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பரவி வரும் ஒமைக்ரான் திரிபும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா, ஒமைக்ரான் பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர உலக நாடுகள் ஏராளமான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34.98 கோடியாக அதிகரித்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் தற்போது 34,98,23,678 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 27,81,42,285 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 56 லட்சத்து 10 ஆயிரத்து 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு தற்போது 6,60,71,257 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 96,160 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புகளில் பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு அமெரிக்கா தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. அந்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,12,314 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,17,28,557 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 841 பேர் தொற்று பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 8,88,623 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, 3,92,12,000 கோடி பாதிப்புகளுடன் இந்தியா இரண்டாம் இடத்திலும், 2,39,60,207 பாதிப்புகளுடன் பிரேசில் மூன்றாமிடம், 1,63,90,818 பாதிப்புகளுடன் பிரான்ஸ் நான்காமிடம், 1,57,84,488 பாதிப்புகளுடன் இங்கிலாந்து ஐந்தாமிடத்திலும் உள்ளது.
No comments:
Post a Comment