சாட்டையை சுழற்றும் செந்தில் பாலாஜி; கோவையில் பலே பிளான்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 22, 2022

சாட்டையை சுழற்றும் செந்தில் பாலாஜி; கோவையில் பலே பிளான்!

சாட்டையை சுழற்றும் செந்தில் பாலாஜி; கோவையில் பலே பிளான்!


கோவையில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் செந்தில் பாலாஜி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சியை திமுக கைப்பற்றினாலும், கொங்கு மண்டலம் அளித்த தோல்வி கட்சி தலைமைக்கு பெரிய சங்கடமாகவே இருந்து வருகிறது. எனவே இந்த மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கை அதிகரிக்கும் வகையில் பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முன்னதாக அமமுகவில் இருந்து திமுகவிற்கு மாறிய செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து கட்சி தலைமை அழகு பார்த்தது.

ஏனெனில் அந்த அளவிற்கு செயல்திறன் மிக்கவர். கட்சி சார்ந்த செயல்பாடுகளுக்கு பணத்தை வாரி இறைக்கக் கூடியவர். அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதிலும், மக்கள் குறைகளை தீர்த்து வைப்பதிலும் மிகவும் தீவிரமாக செயல்படுபவர். இவரை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, கோவை மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் கூட திமுக வெற்றி பெறவில்லை. அதிமுக 9, பாஜக 1 என எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். எனவே இந்த மாவட்டத்தில் திமுகவிற்கு பெரிய சவால் முன்வந்து நிற்கிறது. இதற்கு சரியான ஆள் செந்தில் பாலாஜி தான் என்பது முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணமாக இருக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்ற முனைப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அவற்றை கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி நேர்காணல் நடத்தி வருகிறார்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்; அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!

கடந்த சில நாட்களாக தொண்டாமுத்தூர், செல்வபுரம், காந்தி பார்க், அவினாசி, அன்னூர், உடுமலைப்பேட்டை, சமத்தூர், தாளியூர் உள்ளிட்ட பகுதிகளில் நேர்காணல் நடந்து கொண்டிருக்கிறது. நேர்காணலுக்கு வரும் திமுகவினரிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாவட்டத்தை திமுகவின் செல்வாக்கை அதிகப்படுத்த வேண்டும். சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் கூட எதிர்க்கட்சிகளால் வெற்றி பெற முடியவில்லை.

அதேபோல் கோவையிலும் எதிர்க்கட்சிகளை விரட்டி அடிக்க வேண்டும். இதற்காக தொண்டர்கள் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். கட்சி தலைமையின் ஒப்புதலுடன் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். சீட் கிடைக்காதவர்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபடக் கூடாது. இதுபற்றி தலைமைக்கு தெரிந்தால் கடும் நடவடிக்கைகள் பாயும் என்று எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad