புதிய மின் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி அசத்தல் தகவல்!
புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு சூப்பரான தகவல் ஒன்றை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கப்ளாங்கரை பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆழியார் ஆற்றினை நீர் ஆதாரமாக கொண்டு ரூபாய் 69 லட்சம் செலவில் 212 கிராமங்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட குடிநீர் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் நேற்று காணொளி வாயிலாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதனை நெகமம் அடுத்துள்ள கப்லங்கரை கிராமத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு திட்டத்தின் பயன்பாடு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அதன்பின்னர் செய்தியாளார்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, புதிய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என்றார். விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை 23 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், பல மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மின் தடை ஏற்பட்டாலும் தமிழகத்தில் ஏற்படவில்லை. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில் முதல்வர் அறிவுறுத்தலின்படி மின் விநியோக கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 216 புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்காக இடங்கள் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 73 துணை மின்நிலையங்களுக்கு மட்டும் இடம் தேர்வு செய்ய வேண்டிய பணிகள் உள்ளது. விரைவில் இந்த பணிகள் நிறைவு பெறும்.
புதிய மின் இணைப்புகள் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின்சார இணைப்பு வழங்கப்படும். விவசாயிகளுக்கு முதல்வர் அறிவித்த ஒரு லட்சம் இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 32 ஆயிரம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 45 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆவணங்கள் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்தவுடன் மார்ச் மாதம் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டம் பூர்த்தி செய்யப்படும்.” இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment