திமுக - விசிக கூட்டணியில் விரிசல்?... 4 சீட் மட்டும் ஒதுக்கியதால் விசிக வெளிநடப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 29, 2022

திமுக - விசிக கூட்டணியில் விரிசல்?... 4 சீட் மட்டும் ஒதுக்கியதால் விசிக வெளிநடப்பு!

திமுக - விசிக கூட்டணியில் விரிசல்?... 4 சீட் மட்டும் ஒதுக்கியதால் விசிக வெளிநடப்பு!



திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் 2 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது விசிக வெளிநடப்பு செய்தது.
 திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகளில் மொத்தம் 120 வார்டுகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், நாட்டறம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகளில் மொத்தம் 45 வார்டுகள் ஆகியவற்றிற்கு பிப்ரவரி 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று (ஜனவரி 28) தொடங்கியது.
இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு செய்வதற்கான கூட்டம் தனியார் மண்டபத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜ் தலைமையில் நடைப்பெற்று வருகிறது.

இதில் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், மதிமுக, தமுமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.அப்போது, திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நான்கு நகராட்சிக்கு உட்பட்ட 126 வார்டுகளில் 3 வார்டுகள், நாட்றம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் ஆகிய மூன்று பேருராட்சிக்கு உட்பட்ட 45 வார்டுகளில் 1 வார்டு என மொத்தம் 4 வார்டுகள் மட்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதாக திமுக முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சினர் பேச்சுவார்த்தை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால், திருப்பத்தூர் மாவட்ட திமுக, விசிக கூட்டணியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் வாக்குகள் கணிசமாக உள்ள நிலையில் திமுக சீட்டுகளை கிள்ளி கொடுப்பதாக விசிகவினர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad