பியூட்டி குயின் மாதிரி எல்லா வயசிலும் ஜொலிக்கணும்னா முகத்துக்கு இந்த 5 பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Saturday, January 1, 2022

பியூட்டி குயின் மாதிரி எல்லா வயசிலும் ஜொலிக்கணும்னா முகத்துக்கு இந்த 5 பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!

பியூட்டி குயின் மாதிரி எல்லா வயசிலும் ஜொலிக்கணும்னா முகத்துக்கு இந்த 5 பொருளை மட்டும் யூஸ் பண்ணுங்க!


சருமத்துக்கு அற்புதமான நன்மைகளை தரும் பாரம்பரியமான பொருள்கள் என்ன என்பதை பார்க்கலாம்.
அழகை ஆரோக்கியமாக பாதுகாக்க பாரம்பரியமான பொருள்கள் மட்டுமே போதுமானது. அழகுப்பராமரிப்பில் சேர்க்கப்படும் பொருள்கள் இராசயனங்களை உள்ளடக்கியது. சருமத்துக்கு எந்த பிரச்சனையுமில்லாமல் பாதுகாக்க செய்யும் இயற்கை பொருள்களில் முக்கியமானவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.ஆயுர்வேதத்தில் வேப்பிலை மிக மிக முக்கியமானது. நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு சருமம் ஆகும். இந்த சருமத்தை சேதமில்லாமல் பாதுகாக்கும் பொறுப்பு வேப்பிலைக்கு உண்டு.


வேப்பிலை பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் கொண்டவை. சருமத்துக்கு வேப்பிலைகளில் நன்மைகளில் இதுவும் ஒன்று. இது சரும தொற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும். எரிச்சலை தணிக்கும் மற்றும் சருமத்தை உலர்த்தாமல் அதன் வீக்கத்தை குறைக்கும்.நோய்த்தொற்றுகள் வராமல் இருக்க வேப்பிலை கலந்த நீரில் குளிக்கலாம். இந்த வேப்பிலை பேஸ்ட் முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் முகப்பருக்கள், எரிச்சலுடன் இருப்பது, சீழ் வடியும் பருக்கள் போன்றவற்றுக்கு எதிராக செயல்படக்கூடிய தன்மை இதற்கு உண்டு.

​அசல் சந்தனம்

சந்தனம் சிறந்த கிருமி நாசினி மற்றும் அழற்சி எதிர்ப்பு மூலிகையாகு. இது சருமத்தில் குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளது இது தோல் சுருக்கங்கள் மற்றும் தொய்வுகளில் வயதான எதிர்ப்பு ஃபார்முலாவாக செயல்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தோல் வெடிப்பு அல்லது முகப்பருவுக்கு உதவுகிறது. மேலும் சருமத்தை பிரகாசமாக வைத்திருக்க செய்கிறது.வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சந்தனத்தை பேஸ்ட்டை பயன்படுத்துவதால், சருமம் குறையில்லாத தெளிவான சருமமாக பெறலாம். மேலும் சருமம் பிரகாசமாக ஜொலிப்பதையும் பார்க்கலாம்.

​குங்குமப்பூ

குங்குமப்பூ சருமத்துக்கு நன்மை பயக்கும் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறோம். விலை கூடுதலானது என்றாலும் இது சருமத்துக்கு அதிக நன்மை பயக்கும் பல வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை மென்மையாக்குகிறது. பூஞ்சை எதிர்ப்பு மற்றும் முகப்பரு சிகிச்சைக்கு இதை பயன்படுத்தலாம்.சருமத்தை ஒளிர செய்வதாக அறியப்படும் குங்குமப்பூ பல பொருள்களில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சருமத்துக்கு செய்யப்படும் அழகுப்பராமரிப்பில் சில குங்குமப்பூ இழைகளை சேர்த்து பயன்படுத்தினால் நீங்களே உங்கள் சருமத்தில் உண்டாகும் வித்தியாசத்தை பார்க்கலாம்.

​மஞ்சள்

மஞ்சள் பல வகைகளில் சருமத்துக்கு நன்மை பயக்கும். இது பாரம்பரியமானது. பழமை மிக்கது. இதில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்பு கூறுகளால் நிரம்பியுள்ளது. இது முகப்பரு மற்றும் முகப்பரு தழும்புகள், நிறமி, முதுமையின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் சூரியனால் உண்டாகும் பாதிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க இவை உதவுகிறது.எளிதாக கிடைக்க கூடிய மஞ்சள் சருமத்தை மேம்படுத்தும் முக்கியமான பண்புகளை கொண்டுள்ள குர்குமினை உள்ளடக்கியுள்ளது. இது சருமத்துக்கு பளபளப்பு உண்டாக்குகிறது. முகப்பரு முதல் தடிப்பு தோல் அழற்சி வரை சருமத்துக்கு பல அதிசயங்களை செய்வதில் சிறந்த பொருள் இது.

​துளசி

துளசி மூலிகைகளின் ராணி. இது பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை காளான் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக கரும்புள்ளிகள், முகப்பருவை தடுக்க செய்கிறது. இது சருமத்துக்கு நன்மை பயக்கும் மற்றும் தோல் நோய்களை நீக்குகிறது. துளசியில் வைட்டமின் கே மற்றும் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளது. இது இரத்த ஓட்டத்தை தூண்டுவதன் மூலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கப்பதன் மூலமும் முடிக்கு நன்மை செய்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad