சிக்கிய கே.பி.அன்பழகன்; 57 இடங்களில் கட்டம் கட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 19, 2022

சிக்கிய கே.பி.அன்பழகன்; 57 இடங்களில் கட்டம் கட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை!

சிக்கிய கே.பி.அன்பழகன்; 57 இடங்களில் கட்டம் கட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை!


அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் முறைகேட்டில் ஈடுபட்ட அமைச்சர்களை கட்டம் கட்டும் வகையில் லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததும், இதுதொடர்பான நடவடிக்கைகள் வேகமெடுத்தன. முன்னாள் அமைச்சர்கள் ஒவ்வொருவராக விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என தர்மபுரி, சென்னை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள கணேஷ் கிரானைட், நுங்கம்பாக்கம் கதீட்ரல் கார்டன் லைனில் உள்ள என்.சிவகுமார் பெயரில் உள்ள வீடு, அடையாறு காந்தி நகரில் என்.சிவகுமார் பெயரில் உள்ள வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தெலங்கானா மாநிலத்திலும் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து கொண்டிருக்கிறது.மேலும் வருமானத்திற்கு அதிகமாக 11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன்கள் சசி மோகன், சந்திர மோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கிடைத்துள்ள முதல் தகவல் அறிக்கையில், தர்மபுரியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை காவல்நிலையத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதாவது, 27.04.2016 முதல் 25.07.2018 வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரத்தில் Cr.No.03/AC/2022 u/s 13(2) r/w 13(1) (e) ஆகிய பிரிவுகளின் கீழும், 26.07.2018 முதல் 15.03.2021 வரையிலாக காலகட்டத்தில் அதிகப்படியான சொத்து சேர்த்தது தொடர்பாக u/s 13(2) r/w 13(1) (b) ஆகிய பிரிவுகளின் கீழும் கே.பி.அன்பழகன் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

27.04.2016 முதல் 25.07.2018 வரையிலாக காலகட்டத்தில் அதிகப்படியாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பாக மல்லிகா, சசி மோகன், சந்திர மோகன், வைஷ்ணவி ஆகியோர் மீது u/s 109 IPC r/w 13(2) r/w 13(1) (e) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 26.07.2018 முதல் 15.03.2021 வரையிலான காலகட்டத்தில் u/s 12 r/w 13(2) r/w 13(1) (b) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், பி.தங்கமணி ஆகிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் சிக்கினர். இந்த வரிசையில் தற்போது கே.பி.அன்பழகனும் சிக்கியுள்ளார். இதனால் அதிமுக தரப்பு மிகுந்த பரபரப்பாக காணப்படுகிறது.






No comments:

Post a Comment

Post Top Ad