5 வயது சிறுவர்களுக்கும் தடுப்பூசி... பிரிட்டன் அரசு அதிரடி!
5- 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக பிரிட்டன் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அலை அலையாக வந்து கொண்டிருக்கும் கொரோனா வைரசின் தொடர் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி தடுப்பூசிதான் என்று உலகின் பல்வேறு நாட்டு அரசியல் தலைவர்கள், பிரதமர்கள் திரும்ப திரும்ப கூறி வருகின்றனர்.
தாங்கள் கூறுவதுடன் மட்டும் நிற்காமல், தங்கள் நாட்டு மக்களுக்கு 100 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவும் அந்தந்த நாட்டு அரசுகள் கடந்த ஒராண்டுக்கு மேலாக தொடர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்
இதன் பயனாக, உலக அளவில் பெரும்பாலான நாட்டு மக்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசியும் குறிப்ிடத்தக்க அளவுக்கு செலுத்தப்பட்டுவிட்டது.
18 வயதுக்கு மேற்பட்டவர்களை இலக்காக கொண்டு செலுத்தப்பட்டு வந்த தடுப்பூசி, அடுத்த கட்டமாக 15 -18 வயது சிறார்களுக்கும் போடப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக 5 -11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தற்போது பல்வேறு நாடுகளில் தொடங்கப்பட்டுள்ளது. சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணியில் பிரிட்டன் அரசு முழுவீச்சில் இறங்கியுள்ளது.
நாட்டில் வேகமாக பரவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதி படைத்தவர்களின் பட்டியலில் 5 -11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சா்க்கரை நோய், நோய் எதிா்ப்பு சக்தி குறைபாடு, கற்றலில் குறைபாடு உள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று பிரிட்டன் சுகாதார துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் அந்த நாட்டில் மொத்தம் 5 லட்சம் சிறுவர், சிறுமியர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
2020 ஆண்டு, கொரோனா முதல் அலையின் போது உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று, அங்கு கொரோனாவுக்கு லட்சக்கணக்கானோர் பலியாகினர்.
No comments:
Post a Comment