திருப்பூரை அதிரவைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… எதற்காக தெரியுமா? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 31, 2022

திருப்பூரை அதிரவைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… எதற்காக தெரியுமா?

திருப்பூரை அதிரவைத்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… எதற்காக தெரியுமா?


நேரடி மற்றும் மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்பட்டு உள்ளது.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் கூலி உயர்வு கேட்டு, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் தெக்கலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் 2 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூல் வாங்கி, அதனை காடா துணியாக உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர். அதற்கான கூலி நிர்ணயம் செய்து அதன் அடிப்படையில் கூலி வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில், கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு 7 ஆண்டுகளாக, விசைத்தறிகளுக்கான கூலி உயர்வு முழுமையாகக் கிடைக்கவில்லை. வெகுவாக உயர்ந்துவிட்ட விலைவாசி உயர்வால், இத்தொழிலை கைவிட்டுவிட்டு பலர் வேறு வழிகளைத் தேடி சென்று விட்டனர்.
இத்தொழிலுக்காக வாங்கிய கடனைச் செலுத்த வழியின்றி விசைத்தறியாளர்கள் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து புதிய கூலி உயர்வுக்கான கோரிக்கை வைத்து ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.

அதன் பிறகு 24.11.2021 ஆம் தேதி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், மாநில அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளாலும் அறிவிக்கப்பட்ட, பல்லடம் இரகத்திற்கு 20%, சோமனூர் இரகத்திற்கு 23% கூலி உயர்த்தப்பட்டது.

ஆனால், அதை அமல்படுத்தாமல் காலம் தாழ்த்தி வரும் ஜவுளி உற்பத்தியாளர்களின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, கடந்த 9 ஆம் தேதி முதல் 23 வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர், கோவை மாவட்டங்களில் 2 லட்சம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ. 50கோடி வீதம் இதுவரை சுமார் 1100 கோடிக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நேரடி மற்றும் மறைமுகமாக 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்பட்டு உள்ளது.

தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி மக்கள் முற்றுகை போராட்டம்!

கடந்த சில வாரம் முன்பு கோவை தொழிலாளர் நலத்துறை ஆணையத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து இன்று, திருப்பூர் மாவட்டம் தெக்கலூரில், ஜவுளி உறபத்தியாளர்களை கண்டித்து திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த மங்கலம், பல்லடம், சோனூர், 63 வேலம்பாளையம் உள்ளிட்ட 9 சங்கங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஏராளமான பெண்கள் உட்பட 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment

Post Top Ad