மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் - 60 தொகுதிகளிலும் களமிறங்கும் பாஜக! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Sunday, January 30, 2022

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் - 60 தொகுதிகளிலும் களமிறங்கும் பாஜக!

மணிப்பூர் சட்டப்பேரவை தேர்தல் - 60 தொகுதிகளிலும் களமிறங்கும் பாஜக!



மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட உள்ளது.
உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில், விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு முதற்கட்ட தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், ஏழாவது மற்றும் கடைசி கட்ட தேர்தல், வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது.
கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில், வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில், வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் மாநிலத்தில், இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

முதற்கட்ட தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இரண்டாம் மற்றும் கடைசி கட்ட தேர்தல் மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள், வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் இன்று, மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் பிரேன் சிங், ஹெய்ன்கங் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பலருக்கு, சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பாஜக சார்பில், மூன்று பெண் வேட்பாளர்கள் மற்றும் ஒரு முஸ்லீம் வேட்பாளர் தேர்தலில் களமிறக்கப்பட்டு உள்ளனர். முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு ஆதரவாளர்களுக்கே அதிகளவில் சீட் வழங்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
.கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில், 60 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 21 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை மற்றும் சிறியக் கட்சிகளின் ஆதரவுடன், பாஜக ஆட்சி அமைத்தது. இந்த 21 எம்எல்ஏக்களில், 19 பேருக்கு மட்டுமே தற்போது மீண்டும் தேர்தலில் போட்டியிட சீட் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

.

No comments:

Post a Comment

Post Top Ad