'ஏகே 61' படத்திற்காக சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஜித்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 31, 2022

'ஏகே 61' படத்திற்காக சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஜித்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!

'ஏகே 61' படத்திற்காக சூப்பர் ஸ்டாருடன் இணையும் அஜித்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே.!


அஜித்தின் 'வலிமை' படத்தை மார்ச் இறுதியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றிக்கு பிறகு இரண்டாவது முறையாக எச் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தில் நடித்துள்ளார் அஜித். இந்தப்படத்தின் வெளியீட்டிற்காக வெறித்தனமாக காத்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள். இதனை மீண்டும் வினோத் இயக்கத்தில் தனது 61 படத்தில் நடிக்கிறார் அஜித்.
நீண்ட காலமாக தயாரிப்பில் இருக்கும் 'வலிமை' படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அண்மையில் 'வலிமை' படத்தின் மோஷன் போஸ்டர், பர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அஜித்தின் லுக் இளமையாக இருப்பதாக பலரும் மோஷன் போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

அண்மையில் வெளியான 'வலிமை' டிரெய்லரும் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது. இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு 'வலிமை' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் மார்ச் மாத இறுதியில் 'வலிமை' படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 'வலிமை' படத்தை தொடர்ந்து அஜித்தின் ஏகே 61 படத்தையும் வினோத்தே இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மார்ச் மாதம் துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக பட 'ஏகே 61' படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பிரகாஷ் ராஜ், தபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் தீபாவளி ரிலீசாக ஏகே 61 வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad