72 டூ 240: கொரோனா பாதிப்பு குறித்து கோவை கலெக்டர் அதிர்ச்சி தகவல்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

72 டூ 240: கொரோனா பாதிப்பு குறித்து கோவை கலெக்டர் அதிர்ச்சி தகவல்!

72 டூ 240: கொரோனா பாதிப்பு குறித்து கோவை கலெக்டர் அதிர்ச்சி தகவல்!

கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜிஎஸ் சமீரன் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது:
கொரோனா தொற்று கோவையில் அதிகமாக பரவி வரும் நிலையில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் வருகின்ற 9 ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
மழலையர் வகுப்புகள் தொடங்கி 9 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இருக்காது. மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் இரண்டாம் கொரோனா அலையில் நாள் ஒன்றுக்கு 4700 வரை இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து 72 ஆக இருந்தது. தற்போது ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. பொது இடங்களில் கொரோனா விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

Samayam Tamil
செய்திகள்தமிழ்நாடுபுதுச்சேரிஇந்தியாஉலகம்இலங்கைக்ரைம்வீடியோFact 
TV
ஆட்டோமொபைல்
Web Stories
சமயம் விருதுகள் 2021
ராஜேந்திர பாலாஜிபுதிய கட்டுப்பாடுகள்திருப்பதி ஷாக்ஒமைக்ரான்

72 டூ 240: கொரோனா பாதிப்பு குறித்து கோவை கலெக்டர் அதிர்ச்சி தகவல்!
Giridharan N | Samayam Tamil | Updated: 5 Jan 2022, 11:09 pm
கொரோனா இரண்டாவது அலையின்போது நாள் ஒன்றுக்கு 4700 வரை பாதிப்பு இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து 72 ஆக இருந்தது. தற்போது ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
 
ஹைலைட்ஸ்:
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்கள் சந்திப்பு
கோவையில் இரவு நேர ஊரடங்கு அமல் என தகவல்
மழலையர் பள்ளி வகுப்பு தொடங்கி 9 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்பு இல்லை என்றும் அவர் அறிவிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சமீரன்

சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு?
கோவை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஜிஎஸ் சமீரன் செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது:

கொரோனா தொற்று கோவையில் அதிகமாக பரவி வரும் நிலையில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் வருகின்ற 9 ஆம் தேதி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
மழலையர் வகுப்புகள் தொடங்கி 9 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் இருக்காது. மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் இரண்டாம் கொரோனா அலையில் நாள் ஒன்றுக்கு 4700 வரை இருந்த நிலையில் படிப்படியாக குறைந்து 72 ஆக இருந்தது. தற்போது ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது. பொது இடங்களில் கொரோனா விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவையில் கொரோனாவுடன் போட்டி போடும் கொசு நோய்: மக்கள் கடும் பீதி!
கோவை மாவட்டத்தின் மாநில எல்லைகளில் 11 சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொடீசியா அரங்கில் 350 படுக்கைகள் உள்பட மாவட்டத்தில் 2,730 படுக்கைகள் உள்ளன. தற்போது படுக்கைகள் மற்றும் ஆக்ஸிஜன் தயார் நிலையில் உள்ளன.
கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கட்டுப்பாட்டு அறை மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். கடந்த வாரத்தில் ஒமைக்ரான் தொடர்பாக வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் 5300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
1400 க்கும் மேற்பட்ட பொது வினியோக கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப்பட்டு கூட்டம் தவிர்க்கப்பட்டுள்ளது. எஸ் ஜீன் வகை தொற்று தொடர்பாக கோவையில் மூன்று பேரின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது

கொரோனா சமூக பரவல் என்பதைவிட சமூக பரவல் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது மக்கள் பொதுஇடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் இரண்டு மாஸ்க் அணிய வேண்டும்.
கோவையில் தற்போது வரை கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இல்லை. துடியலூர், சூலூர் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும். இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன வரும் நாட்களில் 11 ஆயிரம் வரை பரிசோதனை வரை செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad