தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூடுவது எப்போது? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 5, 2022

தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூடுவது எப்போது?

தமிழ்நாட்டில் மதுபான கடைகளை மூடுவது எப்போது?கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருக்கும் நிலையில் ,மதுபான கடைகளையும் மதுபான கூடங்களையும அரசு மூட மறுப்பது ஏன் என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தமிழகத்திலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் நேற்று ஊரடங்கு கட்டுப்பாட்டு அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது.

அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ள நிலையில், 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபான கூடங்கள் குறித்து எந்தவிதமான கட்டுப்பாட்டு அறிவிப்புகளும் வெளியாகவில்லை. இதனால் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்

தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதல்வர் ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்? நோய் பரப்பும் இடங்களாக செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும் (Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது

தேவைப்பட்டால் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்து படித்து பார்த்து கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்


No comments:

Post a Comment

Post Top Ad