இன்னும் 7 நாட்கள் தான்; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செம நியூஸ்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

இன்னும் 7 நாட்கள் தான்; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செம நியூஸ்!

இன்னும் 7 நாட்கள் தான்; அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு செம நியூஸ்!


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 20, 21 ஆகிய தேதிகளில் முக்கிய ஏற்பாட்டை தமிழக பள்ளிக் கல்வித்துறை செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறன் மேம்பட அவ்வப்போது சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆற்றலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ’மகிழ் கணிதம்’ என்ற பெயரில் புதிய முயற்சியை பள்ளிக் கல்வித்துறை கையிலெடுத்துள்ளது. முன்னதாக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

அதில், பலரும் கணிதப் பாடங்களை படிப்பதிலும், தேர்வு எழுதி மதிப்பெண் பெறுவதிலும் ஆர்வமின்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் கணிதப் பாடத்தை ஆசிரியர்கள் சரியான முறையில் நடத்தாததும் ஒரு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு முதலில் சிறப்பு பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டது. அதாவது, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கணிதப் பயிற்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குநர் சுதன் மேற்கொண்டு வருகிறார். இவர் பிறப்பித்த உத்தரவின் படி, வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் கணித ஆசிரியர்களுக்கு ’மகிழ் கணிதம்’ என்ற பெயரில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதன்மூலம் கணிதப் பாடத்தை பயமின்றி, மிகவும் எளிதாக, மகிழ்ச்சியாக மாணவர்கள் படிக்க முடியும்.

பாடம் நடத்தும் சூழல் மகிழ்ச்சியாக மாறும். இதுதொடர்பான வழிகாட்டுதல்களை ஆசிரியர்களுக்கு துறை சார்ந்த வல்லுநர்கள் கற்று தர உள்ளனர். இதையொட்டி ஆன்லைன் பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் அரசு பள்ளிகளை சேர்ந்த கணித ஆசிரியர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டிலிருந்த படியே ஆன்லைன் வாயிலாக கல்வி கற்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது பொங்கல் விடுமுறை விடப்பட்டிருப்பதால், இந்த விடுமுறை முடிந்தவுடன் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad