எனக்கு என்டே கிடையாது..மீண்டும் லண்டனில் வடிவேலு..இதான் காரணமா.? - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 12, 2022

எனக்கு என்டே கிடையாது..மீண்டும் லண்டனில் வடிவேலு..இதான் காரணமா.?

எனக்கு என்டே கிடையாது..மீண்டும் லண்டனில் வடிவேலு..இதான் காரணமா.?


நாய் சேகர் படத்தின் இசையமைக்கும் பணியில் கலந்துகொண்ட வடிவேலு
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் வடிவேலு. நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் 2006 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்த இம்சை அரசன் படத்தின் மூலம் ஹீரோவாக அவதரித்தார். பின்பு தொடர்ந்து நகைச்சுவை நடிகராகவும் அவ்வப்போது ஹீரோவாகவும் கலக்கி வந்தார் வடிவேலு.

இந்நிலையில் இம்சை அரசன் இரண்டாம் பாகம் படப்பிடிப்பின்போது இயக்குனர் ஷங்கர் மற்றும் வடிவேலு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக தயாரிப்பாளர் சங்கத்தில் வடிவேலு மீது ஷங்கர் புகார் அளித்தார்.இதையடுத்து வடிவேலுவுக்கு படங்களில் நடிக்க தடை விதித்து ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.


சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு அகற்றப்பட்டதை அடுத்து மீண்டும் படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. ரெட் கார்டு அகற்றப்பட்டதை அடுத்து அவர் முதலில் நடிக்க ஒப்பந்தமான திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ்.

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. இப்படத்தின் பணிகளுக்காக சமீபத்தில் லண்டன் பறந்த இயக்குனர் சுராஜ் மற்றும் வடிவேலு இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் படவேலைகளை துவங்கிய படக்குழு தற்போது லண்டனுக்கு விரைந்துள்ளது. லண்டன் மாநகரில் படத்தின் இசையமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் வடிவேலு படக்குழுவுடன் இணைந்திருப்பதால் அவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தற்போது படக்குழு அவர்கள் லண்டனில் இசையமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில் வடிவேலு, இயக்குனர் சுராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் லைக்கா நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad